வாக்காளர்கள் குழப்பமின்றி ஓட்டு போட சிறப்பு ஏற்பாடு

Advertisement
வாக்குப்பதிவு எந்திரத்தில் உங்கள் வேட்பாளர் பெயர் எந்த இடத்தில் உள்ளது? எளிதாக கண்டறிய போஸ்டர் — தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு.
வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை அளிப்பதை தேர்தல் கமிஷன் எளிமைப்படுத்தியிருக்கிறது. வாக்காளர் தகவல் சீட்டுகளை அச்சடித்து வீடுவீடாக வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் விரும்பும் வேட்பாளரின் பெயர், வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த வரிசை எண்ணில் உள்ளது என்பதில் சிலருக்கு குழப்பம் நேரிடலாம். அவரது பெயர் எந்த இடத்தில் உள்ளது? என்பதை வாக்காளர் அறிந்து கொள்வதற்கு வசதியாக, வேட்பாளரின் வரிசைப் பட்டியல், பேனர் அல்லது போஸ்டராக வைக்கப்படும்.
Advertisement
வாக்குச்சாவடியில் போஸ்டர் ஏற்பாடு
வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள கட்டிடத்தின் பிரதான நுழைவு வாயிலுக்கு வெளியே உள்ள சுவரில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கும். வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள வேட்பாளர் பெயர் வரிசையே இந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கும். எனவே வாக்காளர் விரும்பும் வேட்பாளரின் வரிசை எண் எது? என்பதை வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்னரே அறிந்துகொண்டு உள்ளே நுழையலாம்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு வெளியே வாசலுக்கு அருகேயும் வேட்பாளரின் வரிசைப் பட்டியல் ஒட்டப்பட்டு இருக்கும். அதையும் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்கள்
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க 12 அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்கள் செல்லுபடியாகும்.
அதாவது, ஆதார் அட்டை, 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீட்டு திறனட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, RGI-ஆல் வழங்கப்பட்ட திறனட்டை, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன்), அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை, UDID மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகிய அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Advertisement
Related Articles

மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க அ.இ.அ.தி.மு.க முன்வைக்கும் நிதித் திட்டங்கள் மற்றும் மானியங்கள்!

AIADMK Manifesto 2026: உழுதுண்டு வாழ்வோருக்கு அ.இ.அ.தி.மு.க.வின் 10 முக்கிய வாக்குறுதிகள்!




