கட்சி: மக்கள் நீதி மையம்
பிப்ரவரி 21, 2018 இல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிப் பெயரை அறிவித்தார். கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். இணையதளம் : https://www.maiam.com/ நடிகர் கமல் ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறது. தமிழக நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகின்றது. தேர்தல் அறிக்கையையும் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் மொழி ஆட்சி மொழியாக்கப்படும் உச்சநீதிமன்ற கிளைகள் இந்தியாவின் ஆறு மண்டலங்களில் நிறுவப்படும் கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் கொண்டுவரப்படும் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஓதுக்கீடு காவல்துறையில் பெண்களுக்கு தனிப்பிரிவு குழந்தை கடத்தல், போதைப்பொருட்கள், பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஒழிக்கப்படும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க திட்டங்கள் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் ரேஷன் பொருட்கள் வீட்டில் வழங்கப்படும் ஆசிரியர் பணிமாற்றம் ஊழற்ற முறையில் நடைபெறும் டோல் கட்டணம் முற்றிலும் ஒழிக்கப்படும் காவல்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்படும் மீனவர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்படும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீர் செய்யப்படும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படும்.
போட்டி: 36
வெற்றி: 0
வேட்பாளர் பட்டியல்