கட்சி: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அண்ணா மறைவுக்குப்பின் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் ராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரால் 1972-ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது. நான்கு முனைப்போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப்போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்த படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் Anna Dravida Munnetra Kazhagam என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப்பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். இணையதளம் : aiadmk.com
போட்டி: 19
வெற்றி: 1
வேட்பாளர் பட்டியல்