விஜேந்தர் சிங்க் அரியானா மாநிலத்தை சேர்ந்தவராவார். இவர் ஒரு குத்து சண்டை வீரர் ஆவார்.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் விஜேந்தர் சிங்க் வெண்கல பதக்கம் வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் குத்து சண்டை பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விஜேந்தர் சிங்க் பெற்றார்.
இந்த வெற்றிக்கு பின் இந்தியா அரசு விஜேந்தர் சிங்க்கு விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருத்தான ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கௌரவவித்தது.