வேலுசாமி.பி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(52). ஒன்பதாவது வரை மட்டுமே படித்துள்ள இவர், விவசாயம், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், பெங்களூருவில் பிஸ்கட் கம்பெனி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 25 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக இருக்கும் வேலுச்சாமி, கட்சியில் வேறு எந்தப் பதவியிலும் இல்லை. கடந்த 2016ல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வேலுச்சாமி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், தேர்தல் ரத்தானதால் அவரால் போட்டியிட முடியவில்லை. வேலுச்சாமி கொங்குவெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். ஆனால் மற்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் புதுமுக வேட்பாளராகத்தான் களமிறங்க இருக்கிறார். கட்சியில் சாதாரண தொண்டருக்கு திமுக தலைமை சீட் வழங்கியிருப்பது தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இவருடைய மனைவி பெயர் பரமேஸ்வரி. இவர்களுக்கு நவீன் என்ற மகனும், சுஸ்மா என்ற மகளும் இருக்கிறார்கள்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: முகவரி: 2-229 ஜாவத்தாபட்டி ஒடிஞ்சாட்ரம் 624619
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துகள்: ரூ 14,80,76,407
வேறு தொழில்
: சமூக பணியாளர் மற்றும் வணிகம்
தேர்தல் செய்திகள்