இவர் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். விற்பனையாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 1978 ஆம் ஆண்டில் வசந்த் & கோ நிறுவனத்தை நிறுவினார்.
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுளின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சொத்து மதிப்பு:
கையிருப்பு, வங்கி டிபாசிட்: 230 கோடியே, 20 லட்சத்து, 95 ஆயிரத்து, 302 ரூபாய்.அசையா சொத்து: 181 கோடியே, 95 லட்சம்.மனைவி பெயரில் அசையும் சொத்து: 28.35 லட்சம், அசையா சொத்து: 4.75 கோடி ரூபாய்.வங்கி கடன்: 154.75 கோடி ரூபாய்.