வானூர் என்.கணபதி
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பட்டியலை கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று காலை அறிவித்தார். இதில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரான என்.கணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1996 முதல் 2001 வரை அச்சரம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். அதனை தொடர்ந்து 2001&ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வானூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2006&ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வானூர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவராகவும், ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட பொருளாளராகவும் பதவி வகித்து வந்த இவர் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது தன்னை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைத்துக்கொண்டார். வேட்பாளர் என்.கணபதி கடந்த 12.5.1963&ல் பிறந்தார். இவருடைய சொந்த ஊர் வானூர் தாலுகா அச்சரம்பட்டு கிராமமாகும். இவருடைய மனைவி எழிலரசி. மகன் சாந்தகுமாருக்கு திருமணமாகி சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மகள் மைதிலிக்கு திருமணமாகி சென்னையில் உள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: 8-ம் வகுப்பு தேர்ச்சி
வசிப்பிடம்
: அசையும் சொத்து: ரூ.16.5 லட்சம் அசையா சொத்து : ரூ.13 லட்சம்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2001
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: அசையும் சொத்து: ரூ.16.5 லட்சம் அசையா சொத்து : ரூ.13 லட்சம்
வேறு தொழில்
: விவசாயம்
தேர்தல் செய்திகள்