வடிவேல் இராவணன்
வடிவேல் இராவணன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின், தற்போதைய பொதுச் செயலாளரும் ஆவார். இவர் அடித்தள மக்களுக்காக எழுதும் எழுத்தாளரும் ஆவார். இவர் பகுத்தறிவு, அம்பேத்காரிய எண்ணங்களை கொண்டவர். இவர் தேனி மாவட்டத்தில் கோட்டூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தைப் பெயர் சண்முகவேல் ஆகும். 1980களில் திருச்சியில் உள்ள அகில இந்திய வானொலியின் நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினார் 1980களில் ஏற்பட்ட போடி கலவரத்தின் பாதிப்பால் பாட்டாளி மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரின் வழிகாட்டுதலின்படியே ஜான் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பசுபதி பாண்டியன், முருகவேல்ராசன் போன்றோர் அக்கட்சியில் இணைந்து பின் வெளியேறியவர்கள். தற்பொழுது அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் இவர் முன்னர் இலக்கிய-கலைப் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகப் போட்டியிட்டு, 43,506 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.ஏ.தமிழ்
வசிப்பிடம்
: 193, மேற்கு தெரு, கோட்டூர் கிராமம் தேனி மாவட்டம்,
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: அசையும் சொத்து ரூ.11.36 லட்சம் ; அசையா சொத்து ஏதும் இல்லை.
வேறு தொழில்
: -
தேர்தல் செய்திகள்