தொல்.திருமாவளவன்
முனைவர் தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகத்து 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள்மதுரையில் அக்கொடியை ஏற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார். தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: டாக்டர் PhD. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திலிருந்து, திருநெல்வேலி, ஆண்டு 2018
வசிப்பிடம்
: கெயித் ஸ்ட்ரீட் அங்ஙனுர் சன்னாசிநல்லூர் ஊராட்சி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 4
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 4
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 4
சொத்து நிலவரம்
: விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அசையும் சொத்து மொத்த மதிப்பு ரூ.58 லட்சத்து 71 ஆயிரத்து 292-ம், அசையா சொத்தான வீட்டின் மதிப்பு ரூ.18 லட்சத்து 27 ஆயிரத்து 800-ம், பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ.25
வேறு தொழில்
: சமூக பணியாளர்
தேர்தல் செய்திகள்