திருநாவுக்கரசர்
அரசியலில் மூத்த தலைவர் திருநாவுக்கரசர். எம்ஜிஆரின் ஆட்சியில் துணை சபாநாயகர், வீட்டு வசதித்துறை அமைச்சர் என பதவி வகித்தவர். எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி இரண்டாக ஆனபோது, ஜானகி அணியைவிட ஜெ.அணிக்கு பக்கபலமாக இருந்து அவருக்கு வழிகாட்டியவர்களிலும், வெற்றி பெற வைத்தவர்களிலும் இவரும் ஒருவர்! பின்னர் திருநாவுக்கரசர் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக் கட்சி தொடங்கினார். 1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அடுத்த ஆண்டே நடைபெற்ற எம்பி தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்தார். இதற்கு பிறகு தனது எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்து கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். 1977 - அறந்தாங்கி - இரட்டை இலை 1980- அறந்தாங்கி - இரட்டை இலை 1984- இரட்டை இலை 1989 - ஜெ.அணியில் -சேவல் சின்னம் 1991 - அறந்தாங்கியில் குடை சின்னம் (திமுகவுடன் கூட்டணி) 1996 - அதிமுகவில் இணைந்து இரட்டை இலையில் அறந்தாங்கியில் போட்டி வெற்றி. 1998 - புதுக்கோட்டை - மாம்பழம் சின்னம் (காங்கிரசுடன் கூட்டணி) 1999 - லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக புதுக்கோட்டையில் வெற்றி - மோதிரம் (திமுகவுடன் கூட்டணி வைத்து) 2009ல் - பாஜக வேட்பாளராக ராமநாதபுரத்தில் போட்டி தாமரை சின்னம் - தோல்வி. 2019 - காங்கிரசில் கை சின்னத்தில் திருச்சியில் போட்டி. மனுவுடன் திருநாவுக்கரசர் அளித்த சொத்து பட்டியல்:கையிருப்பு ரொக்கம், 33 ஆயிரம், வங்கியில் சேமிப்பாக, 42 ஆயிரம் ரூபாய், 120 கிராம் தங்க நகை. 4.38 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள்; 27.14 லட்சம் ரூபாய் மதிப்பில், அசையா சொத்துகள். கடனாக, 40 ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி ஜெயந்தியிடம், 26 ஆயிரம் ரூபாயும், வங்கி சேமிப்பாக, 36 ஆயிரம் ரூபாய், 400 கிராம் நகை. மனைவி பெயரில், 2.08 கோடி ரூபாய் மதிப்பில், அசையும் சொத்துகளும், விவசாய நிலம், வணிக கட்டடம், குடியிருப்பு கட்டடம் என, 81.56 லட்சம் ரூபாய் அசையாக சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, திருநாவுக்கரசர் கூறுகையில், ''கடந்த, 1977 துவங்கி, ஆறு முறை அறந்தாங்கி தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி இருக்கிறேன். 40 ஆண்டு அரசியலில் பெற்ற அனுபவங்களையும், தொடர்புகளையும் வைத்து, வாழ்நாள் முழுவதும், திருச்சி மக்களுக்கு பணியாற்றுவேன்,'' என்றார். சர்ச்சைக்கு விளக்கம்
போட்டியிடும் தொகுதி
கல்வி
: அவர் எம்.ஏ., பி.எல். சென்னை சென்னை பல்கலைக்கழகம், சென்னை மற்றும் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி படித்தார்
வசிப்பிடம்
: தியத்தூர் கிராமம் & போஸ்ட், புதுடயர்கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1967
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 9
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 4
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 4
சொத்து நிலவரம்
: மனுவுடன் திருநாவுக்கரசர் அளித்த சொத்து பட்டியல்:கையிருப்பு ரொக்கம், 33 ஆயிரம், வங்கியில் சேமிப்பாக, 42 ஆயிரம் ரூபாய், 120 கிராம் தங்க நகை. 4.38 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள்; 27.14 லட்சம்
வேறு தொழில்
: சமூக பணியாளர்
தேர்தல் செய்திகள்