தமிழச்சி தங்கபாண்டியன்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுமதி. இவரது கணவர் சந்திரசேகர் ஒரு காவல்துறை அதிகாரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் வி.தங்கப்பாண்டியனின் மகள் ஆவார். தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான (13.5.2006 - 15.5.2011) தங்கம் தென்னரசு இவருக்கு தம்பி ஆவார். மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்று இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். தமிழச்சி தங்கபாண்டியன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தற்போது திமுகவின் மகளிரணியில் முக்கிய பதவி வகித்து வருகிறார். இவரது தொகுப்புகள் விகடன் இதழில் வெளிவந்துள்ளன. சொத்து மதிப்பு: தமிழச்சி தங்கபாண்டியன் பெயரில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரத்து 792 மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.5 கோடியே 99 லட்சத்து 79 ஆயிரத்து 378 மதிப்பில் அசையா சொத்தும் உள்ளது. அவரது கணவர் சந்திரசேகர் பெயரில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரத்து 170 மதிப்புள்ள அசையும் சொத்தும், ரூ.1 கோடியே 99 லட்சத்து 29 ஆயிரத்து 911 மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன. மகள் ச.நித்திலா பெயரில் ரூ.31 லட்சத்து 59 ஆயிரத்து 868 மதிப்புள்ள அசையும் சொத்து உள்ளன.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: ஆங்கில இலக்கியம் , முதுகலை
வசிப்பிடம்
: சென்னை
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1985
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ரூ.1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரத்து 792 மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.5 கோடியே 99 லட்சத்து 79 ஆயிரத்து 378 மதிப்பில் அசையா சொத்தும் உள்ளது.
வேறு தொழில்
: எழுத்தாளர்
தேர்தல் செய்திகள்