தம்பிதுரை.எம்
தம்பிதுரை அ.தி.மு.க கட்சியை சேர்ந்தவர் ஆவார். 16வது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன . அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் 1985 முதல் 1989 வரை பாராளுமன்ற துணைத்தலைவராகவும், பல்வேறு சமயங்களில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009,2014 தேர்தல்களில், அ.தி.மு.க கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க.வில் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்தவர். அ.தி.மு.க வின் பாராளுமன்றக்குழு தலைவராக உள்ளார்
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எம்.ஏ , எம்பில் ,பி.எச்டி
வசிப்பிடம்
: நிரந்தர முகவரி 21-D, குமாரசாமி அடுக்குமாடி குடியிருப்பு, ராமனுஜம் நகர், கூயி சாலை, கரூர் -639001, தமிழ்நாடு
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1984
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 5
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 5
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 5
சொத்து நிலவரம்
: சொத்து மதிப்பு: ரூபாய் 8.7 கோடி
வேறு தொழில்
: சமூக பணியாளர்
தேர்தல் செய்திகள்