தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன் 2014 ஆகஸ்ட் முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். இவர் இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார். சொத்து விபரம்: பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கையிருப்பு ரூ.50 ஆயிரம், வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம், 200 பவுன் நகை மற்றும் வங்கி வைப்புத்தொகை உள்பட மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.50 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். தனது கணவர் சவுந்தரராஜன் பெயரில் வங்கி சேமிப்பு மற்றும் வைப்புத்தொகையாக ரூ.2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரமும், ரூ.6 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தும் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
கட்சி
வயது
: 60
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எம்.பி.பி.எஸ்.
வசிப்பிடம்
: அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1999
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 1
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: 11 கோடி
வேறு தொழில்
: மருத்துவம்
தேர்தல் செய்திகள்