சுரேஷ் கோபி மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் ஜுன் 26, 1960ல் பிறந்தார்.
இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் ஆவார்கள்.
மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ்.
சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.