ஸ்ரீரமேஷ்.டி.ஆர்.வி.எஸ்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் பண்ருட்டியை சேர்ந்த டி.ஆர்.வி.எஸ். ஸ்ரீரமேஷ் போட்டியிடுகிறார். இவருக்கு வயது 48. பி.பி.எம். பட்டப்படிப்பை முடித்து முந்திரி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவருடைய தந்தை டி.ஆர்.வி. செல்வராஜ் ஆவார். தி.மு.க.வில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராகவும், தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவராகவும், பண்ருட்டியில் உள்ள டி.ஆர்.வி. என்று முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் இருந்து வருகிறார். இவருக்கு உஷா என்கிற மனைவியும், காயத்ரி, ஸ்ரீநிதி, கண்மணி என்ற 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் காயத்ரிக்கு திருமணமாகிவிட்டது. ஸ்ரீநிதி எஸ்.எஸ்.எல்.சி.யும், கண்மணி 7&ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இதுவரையில் தேர்தல் களத்தில் எந்தபதவிக்கும் டி.ஆர்.வி.எஸ். ஸ்ரீரமேஷ் போட்டியிட்டது இல்லை. இதன் மூலம் தேர்தல் களத்தில் வேட்பாளராக முதல் முறையாக மக்களை சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.பி.எம்.
வசிப்பிடம்
: 65,கும்பகோணம் சாலை, பன்ருதி, கடலூர்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1995
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 12,76,23,514
வேறு தொழில்
: சமூக பணியாளர் மற்றும் வணிகம்
தேர்தல் செய்திகள்