ஸ்மிர்தி இரானி
ஸ்மிருதி இரானி 2003 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா இளைஞர் பிரிவின் துணைத் தலைவரானார். 2004 ஆம் ஆண்டில் 14-வது மக்களவைத் தேர்தலில், டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் கபில் சிபலுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்பு பா.ஜ.க மத்திய குழுவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இவர் பா.ஜ.க தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார், மேலும் ஜூன் 24 அன்று பா.ஜ.க அனைத்து இந்திய மகளிர் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பிரதம மந்திரி நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜூலை 2016 ல், மனித வள மேம்பாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக ஜவுளித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு ஸ்மிர்தி இரானி வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்கட்சியினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனவும், அவரது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் ரூ.1.75 கோடி அசையும் சொத்துக்கள் ஆகும். இரானிக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கியிருக்கும் வீடு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.2.96 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மிரிதி இரானியின் கணவர் ஜுபின் இரானியின் சொத்து மதிப்பில் ரூ.1.69கோடி அசையும் சொத்துக்கள் எனவும், ரூ.2.97கோடி அசையா சொத்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்சி
வயது
: 45
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.காம், Part 1 (not completed)
வசிப்பிடம்
: நிரந்தர முகவரி A-602, நெப்டியூன் குடியிருப்புகள், 4 வது கிராஸ் லேன், லோகன்வால்லா காம்ப்ளக்ஸ், ஆந்தேரி வெஸ்ட், மும்பை தற்போதைய முகவரி பங்களா எண். 28, துக்ளக் க்ரெசண்ட், புது டெல்லி 110003
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2003
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 1
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: சொத்து மதிப்பு: ரூபாய் 11.11 கோடி
வேறு தொழில்
: சமூக பணியாளர்
தேர்தல் செய்திகள்