சண்முகம்.எ.சி.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். ஏ.சி.சண்முகம் அவரது மனைவி லலிதா லட்சுமி பெயரில் மொத்தம் ரூ.191 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரூ.8,41,243, வங்கியிருப்பு ரூ.57,68,234, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.23,95,78,036, காப்பீட்டு முதலீடு ரூ.1,30,000, இதர முதலீட்டின் மீதான வருவாளிணி ரூ.3,12,77,307, நகைகள் ரூ.66,03,500, அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரூ.8,52,117, வங்கியிருப்பு ரூ.7,55,688, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.16,27,49,967, காப்பீட்டு முதலீடு ரூ.2,97,380, இதர முதலீட்டின் மீதான வரு வாளிணி ரூ.3,63,80,145, நகைகள் ரூ.1,04,07,385 என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் உள்ளன. மேலும், விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ.41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.34 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத் துக்கள் உள்ளன. மொத்தம் ஏ.சி.சண்முகம், அவருடைய மனைவி லலிதா லட்சுமி சண் முகம் ஆகியோர் பெயரில் ரூ.191 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. மேலும், ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ.13 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.9 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும் கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி
வயது
: 69
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.ஏ.பி.எல்.
வசிப்பிடம்
: பழைய எண் 68, புதிய எண் 19, பொன்னுசாமி தெரு, அருணகிரி சத்ரம், ஆரணி -632301
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1984
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 1
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 1,25,84,59,641
வேறு தொழில்
: சமூக பணியாளர் மற்றும் வணிகம்
தேர்தல் செய்திகள்