செல்வம்.எஸ்.ஆர்
எஸ்.ஆர்.செல்வம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விண்ணப்பள்ளி எஸ்.ஆர்.எஸ்.கார்டன் பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் எஸ்.கே.ராமகிருஷ்ணன். எஸ்.ஆர்.செல்வம் 15-4-1953 அன்று பிறந்தார். மனைவி எஸ்.சாந்தாமணி, மகன் எஸ்.பூர்ணசந்திரன், மகள் எஸ்.சஞ்சிதா ஆவர். இந்து மதம், நாடார் சமூகத்தை சேர்ந்த அவர் 9-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். அரசியலில் ஈடுபாடு உடைய எஸ்.ஆர்.செல்வம் கடந்த 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். கட்சி பணியில் சிறந்து விளங்கிய அவர் பவானிசாகர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர், பவானிசாகர் தொகுதி செயலாளர் ஆகிய கட்சி பதவிகளை வகித்து வந்தார். மேலும், ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட துணைத்தலைவராகவும் அரசு பதவிகளை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். எனவே எஸ்.ஆர்.செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து தன்னை விடுவித்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். தற்போது அ.ம.மு.க.வில் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: 9-ம் வகுப்பு
வசிப்பிடம்
: 4/34-A வின்னப்பள்ளி, ஈரோடு மாவட்ட
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1972
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 6,15,58,069
வேறு தொழில்
: விவசாயம்
தேர்தல் செய்திகள்