சரிதா நாயர் கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கண்ணுரில் பிறந்தார்.
சரிதா நாயரின் தந்தை பெயர் சோமசேகரன் மற்றும் தாயார் பெயர் இந்திரா ஆவர்.
கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் ஊழல் முறைகேட்டில் சரிதா நாயர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.
இந்த முறைகேட்டில் அப்போதைய கேரள அரசியல் கட்சி அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன.
இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது சரிதா நாயர் 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் சரிதா நாயரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
தற்போது ராகுல் காந்தி போட்டியிடும் மற்றொரு தொகுதியான அமேதியில் சரிதா நாயர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.