74 வயதான ராமலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா சீனிவாசநல்லூரைச் சேர்ந்தவர். விவசாயம் தான் பிஏ பட்டதாரியான இவரது தொழில். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 1970ம் ஆண்டு திமுக மாணவர் அமைப்பில் இணைந்து தனது அரசியல் பணியைத் துவக்கி ராமலிங்கம், 1977, 1981, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் நான்கு முறை திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்துள்ளார். இதையடுத்து பிற்பட்டோர் நல ஆணைய உறுப்பினராக மூன்று முறை இருந்துள்ளார். திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரான ராமலிங்கம், இம்முறை மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார்