ராஜ்நாத் சிங் பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும், பின் அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் துவக்கத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். இவர் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் தனது நீண்ட காலத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஜனதா கட்சியில் ஈடுபட்டார்.