ராகுல் காந்தி
பிறந்த தேதி : 19 ஜூன் 1970 வயது : 48 பிறந்த ஊர் :புதுடெல்லி பிறந்த மாநிலம் :புது டெல்லி கல்வி தகுதி : ஆய்வியல் நிறைஞர் முதுதத்துவமாணி,கேம்பிரிட்ஜ்.Trinity College, Cambridge (MPhil) கட்சி பெயர் :இந்திய தேசிய காங்கிரஸ் தற்போதைய பதவி :இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். ராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச் 2004ல் அறிவித்தார். பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 இல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான உத்திரப்பிரதேசத்தில் உள்ள அமேதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றிய இவர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் அவருக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அதன் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி ராகுல் காந்தியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.5.80 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.10.08 கோடி என மொத்தம் ரூ.15.88 கோடி சொத்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதில் 333.3 கிராம் தங்கமும் அடங்கும். எம்.பி. பதவி மூலம் கிடைக்கும் ஊதியம், ராயல்டி, வாடகை, பத்திரங்கள் மூலமான வட்டி உள்ளிட்டவற்றை வருமானமாக காட்டப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் 2017-18-ம் ஆண்டு வருமானம் ரூ.1.12 கோடி ஆகும். மேலும், ராகுல் காந்தியிடம் ரொக்கமாக ரூ.40 ஆயிரமும், பல்வேறு வங்கிகளில் ரூ.17.93 லட்சம் டெபாசிட்டும் செய்யப்பட்டு இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப்போல பத்திரங்கள், பங்குகள் என ரூ.5.19 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.72 லட்சம் கடன் இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் டெல்லி சுல்தான்பூரில் உள்ள பரம்பரை சொத்தான பண்ணை நிலத்தில் பங்கும், குருகிராமில் 2 அலுவலகங்களும் சொந்தமாக உள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டப்படிப்பு முடித்து இருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, தனக்கு எதிராக 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதில் மகாராஷ்டிரத்தில் 2 வழக்குகளும், ஜார்கண்ட், அசாம் மற்றும் டெல்லியில் தலா ஒரு வழக்கும் அடங்கும் என அவரது வேட்புமனுவில் கூறப்பட்டு இருந்தது.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: M.Phil .கேம்பிரிட்ஜ்.
வசிப்பிடம்
: புதுடெல்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2004
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 3
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 3
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 3
சொத்து நிலவரம்
: 15.88 கோடி
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்