பார்த்திபன்.எஸ்.ஆர்
சேலம் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஆர்.பார்த்திபன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த 1970&ம் ஆண்டு பிறந்தார். தந்தை ராஜமாணிக்கம்& தாய் சரஸ்வதி ஆவர். எம்.ஏ. பி.எல். படித்த வக்கீல் ஆவார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு தயாநிதி, நிரஞ்சன் என 2 மகன்கள் உள்ளனர். இவர் சேலம் அஸ்தம்பட்டி காயத்திரி நகரில் வசித்து வருகிறார். மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எம்.ஏ., பி.எல்.
வசிப்பிடம்
: முகவரி 133/3, காயத்திரி நகர், எம்.டி.எஸ். நகர் பின்புறம், அஸ்தம்பட்டி, சேலம் 600007.
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: அசையும் சொத்துகள் ரூ.72.26 லட்சம் அசையா சொத்துகள் ரூ.4.27 கோடி
வேறு தொழில்
: வழக்கறிஞர், விவசாயம்
தேர்தல் செய்திகள்