பெயர் :நரேந்திர தாமோதர் தாசு மோடி
பிறந்த தேதி : 17 செப்டம்பர் 1950
வயது : 68
பிறந்த ஊர் :வாட்நகர்
பிறந்த மாநிலம் :குஜராத்
கல்வி தகுதி :முதுநிலை அரசியல் அறிவியல் (MA in political science)
கட்சி பெயர் :பாரதீய ஜனதா கட்சி
தற்போதைய பதவி :பிரதமர்
நரேந்திரதாமோதர்தாசு மோடி,2001 குஜராத் இடைத் தேர்தல்களில் வெற்றிப்பெற்று அக்டோபர் 7, 2001 இல் மாநில முதல்வர் ஆனார். பின் டிசம்பர் 23, 2007 இல் தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று 16 மே 2014 வரை
ஆட்சியில் இருந்தார்.
2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.வாரணாசி தொகுதியிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மே 26, 2014 அன்று நாட்டின் 14 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.