பெயர் :முலாயம் சிங் யாதவ்
பிறந்த தேதி : நவம்பர் 22, 1939
வயது : 68
பிறந்த ஊர் :சைஃபை கிராமம்,எட்டாவா மாவட்டம்.
பிறந்த மாநிலம் :உத்திரப் பிரதேசம்.
கல்வி தகுதி :முதுநிலை அரசியல் அறிவியல் (MA in political science)
கட்சி பெயர் :சமாஜ்வாதி கட்சி
இவர் மூன்று முறை உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு மெய்ன்புரி லோக் சபா தொகுதியில் வெற்றி பெற்றார்.
முலாயம் சிங்கை பொறுத்தவரையில் அவருக்கு மெய்ன்புரி தொகுதி என்பது மிகவும் பாதுகாப்பான தொகுதியாக கருதப்படுகிறது. அவர் கடந்த 1996, 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
கடந்த 2014-ல் ஆசம்கர் தொகுதியை தேர்வு செய்த முலாயம் சிங் யாதவ் அங்கு 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.