சமூக செயற்பாட்டாளர்தான் மூகாம்பிகை. இவர் ஒரு பைக் ரேசர். கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் செய்து சாதனை புரிந்தவர்.
20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்வியின் முக்கியத்துவம், பெண் வலிமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் சாலைப் பயணம் மேற்கொண்டவர். மேலும், நலிந்த கலைகளை ஊக்குவிக்க வெவ்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து செல்பவர். குறிப்பாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி, அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு நட்டு வளர்க்க செடிகள் கொடுத்தல் போன்ற முயற்சிகளை செய்து வருகிறார்.