கர்ணன்.சி.எஸ்
சென்னை நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை கவனித்துக் கொண்டிருந்த கர்ணன், சென்னை பெருநகரக் குடிநீர் வடிகால் துறையில் சட்ட ஆலோசகராகவும், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் வழக்குகளை நடத்தி வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்தார். பின்னர் நீதியரசர் கர்ணனை, இந்திய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகிப் போனார். இம்மாறுதல் உத்தரவு தொடர்பாக, நீதியரசர் சி. எஸ். கர்ணன் இந்தியப் பிரதமர் அலுவலகம், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பினார். மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை இந்தியப் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். நீதிபதி சி. எஸ். கர்ணனின் செயல் நீதிமன்ற அவமதிப்பாக கருதிய இந்திய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் காரணமாக மே மாதம் 8 ஆம் திகதி 2017 ஆண்டு இவருக்கு உச்ச நீந்திமன்ற நீதிபதிகள் சகதீசு சிங் கேகர், தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர்,பி.சி.கோஸ், குரியன் ஜோசப் போன்றோரின் தீர்ப்பின்படி 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கு இவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.எஸ்சி.,பி.எல்.
வசிப்பிடம்
: சென்னை
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2018
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 19,46,055
வேறு தொழில்
: முன்னாள் நீதிபதி
தேர்தல் செய்திகள்