கனிமொழி
பெயர் :கனிமொழி பிறந்த தேதி :5 ஜனவரி 1968 வயது :51 பிறந்த ஊர் :சென்னை பிறந்த மாநிலம் :தமிழ்நாடு கட்சி பெயர் : திராவிட முன்னேற்றக் கழகம் கனிமொழி,தமிழக முன்னாள் முதல்வர் கருணாநி அவர்களின் மகள் ஆவார் . கனிமொழி 'தி இந்து' நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தினார். , கனிமொழி வேட்புமனு தாக்கலின் போது தனக்கு, 30 கோடி ரூபாய் மதிப்பில், சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து விபரம்:தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. தனது பெயரில் வங்கி சேமிப்பு மற்றும் வைப்புத்தொகை ரூ.16 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 673, கையிருப்பு ரூ.12 ஆயிரத்து 144 மற்றும் 2 கார், 704 கிராம் தங்கம், 13 காரட் வைரம் உள்பட மொத்தம் ரூ.21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 369 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்தும் என மொத்தம் ரூ.30 கோடியே 8 லட்சத்து 77 ஆயிரத்து 369 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். வங்கிக்கடன் ரூ.1 கோடியே 92 லட்சம் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். தன் மீது 6 குற்ற வழக்குகள் தொடரப்பட்டது. இதில் 2 வழக்குகளில் விடுவிக்கப்பட்டு, 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளார். அவரது கணவர் பெயரில் வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 223-ம், ரூ.10 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தும் உள்ளது.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: MA (Economics)
வசிப்பிடம்
: நிரந்தர முகவரி 14-1, முதல் முதன்மை சாலை, சிஐடி காலனி, மைலாப்பூர், சென்னை தற்போதைய முகவரி C-601, ஸ்வர்ணா ஜெயந்தி சதன், டாக்டர் பி.டி. மார்க், புது தில்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1975
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 1
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ரூ.30 கோடி
வேறு தொழில்
: எழுத்தாளர் மற்றும் சமூக தொழிலாளி
தேர்தல் செய்திகள்