ஹேம மாலினி
நடிகை ஹேமமாலினி தமிழ்நாட்டில் அம்மன்குடி (ஒரத்தநாடு) எனும் ஊரில் பிறந்தார். 1963 இல் நடனப் பெண்மணியாக இது சத்தியம் என்ற திரைப்படத்திலும் 1965இல் நடனப் பெண்மணியாக பாண்டவர் வனவாசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்த முதல் இந்தி திரைப்படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்த சப்னோ கா சௌதாகர் ஆகும்; இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில், முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இவர பிரபல நடிகர் தர்மேந்திராவின் மனைவி ஆவார். உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினி தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.101 கோடி என தெரிவித்துள்ளார். இதில் பங்களாக்கள், நகைகள், பணம், பங்குகள், வைப்புத்தொகை என அனைத்தும் அடங்கும். 2014 தேர்தலின்போது அவர் தனது சொத்து மதிப்பு சுமார் ரூ.66 கோடி என தெரிவித்து இருந்தார். அவர் தாக்கல் செய்த விவரப்படி 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.34.46 கோடி அதிகரித்துள்ளது. அவரது கணவர் தர்மேந்திராவின் சொத்து மதிப்பையும் சேர்த்து மொத்தம் ரூ.123.85 கோடி என கூறப்பட்டுள்ளது. 2013-14ல் ஹேமமாலினியின் வருமானம் ரூ.15.93 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். 2017-18ல் வருமானம் ரூ.1.19 கோடி என தெரிவித்துள்ளார்.
கட்சி
வயது
: 72
போட்டியிடும் தொகுதி
கல்வி
: கலை மற்றும் அறிவியல் பட்டம்
வசிப்பிடம்
: நிரந்தர முகவரி 'அத்வைதி', கதவு எண் 17, ஜெய்ஹிந்த் சொசைட்டி, 12 என்.எஸ். சாலை, J.V.P.D. திட்டம், ஜூஹூ, மும்பை -400 049, மகாராஷ்டிரா: (022) 26710018/46, 09870335335 (எம்) தற்போதைய முகவரி பிளாட் எண் 702,
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2014
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 1
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: 101 கோடி
வேறு தொழில்
: கலைஞர்
தேர்தல் செய்திகள்