கவுதம் சிகாமணி.தெ
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட டாக்டர் பொன்.கவுதமசிகாமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி& விசாலாட்சி பொன்முடியின் மகன் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணமலை £ பல்கலைக்கழகத்தில் 1992&ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்தார். 2001&ம் ஆண்டில் சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.ஆர்த்தோ (எலும்பு முறிவு) படிப்பை மேற்கொண்டார். 1990&ம் ஆண்டு இவர் கல்லூரி படிப்பை தொடங்கும்போதே தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்து பணியாற்றினார். 2005&ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் நற்பணி மன்றத்தை தொடங்கி அதன் தலைவராக இருந்து மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கைப்பந்து, இறகு பந்து, கிரிக்கெட், ஆக்கி போட்டிகளை நடத்தினார். குறிப்பாக கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பிறந்த நாள் விழாவின்போது இளைஞர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளையும் மற்றும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளதோடு ரத்ததான முகாம், மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். தற்போது வரை அதே பதவியில் இருந்து வருகிறார். மேலும் இவர் சென்னையில் நடந்த சர்வதேச அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு கைப்பந்து கழக செயல் தலைவராக இருந்து பணியாற்றியுள்ளார். வேட்பாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி கடந்த 21.6.1974 அன்று பிறந்தார். இவருடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமமாகும். இவருடைய மனைவி கவிதா சென்னையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். மகள் கயல் பிளஸ்&2 வும், மகன் சூர்யாபொன்முடி 6&ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எம்.ஆர்.ஆர்த்தோ 2005 முதல் ராமச்சந்திர மருத்துவ கல்லூரி கல்லூரி
வசிப்பிடம்
: 6-4, திருப்பனசார் தெரு விழுப்புரம் முள் -605602
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1992
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 47,11,86,830
வேறு தொழில்
: மருத்துவர்
தேர்தல் செய்திகள்