கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். கவுதம் கம்பீரின் தந்தை பெயர் தீபக,கம்பீர் தாய் பெயர் சீமா. இவர் இடது கை மட்டையாளர் ஆவார்.இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க வீரராக களம் இறங்கி உள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் புது தில்லி அணிக்காக விளையாடி உள்ளார் . இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவராக விளையாடி உள்ளார். ஆனால் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவராக செயல்பட்டார். 2003 ஆம் ஆண்டில் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார் கௌதம் கம்பீர். 2018 டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். தற்போது அவருக்கு கிழக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சி
வயது
: 39
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: டெல்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2019
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ரூ.147 கோடி
வேறு தொழில்
: கிரிக்கெட்,விளையாட்டு துறை
தேர்தல் செய்திகள்