கணேசமூர்த்தி.எ
அ.கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். ஏ. கணேசமூர்த்தி, ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். இந்தியாவின் 2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதின் விளைவாக 15 வது மக்களவையில் இடம் பெற்றார்.2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே. மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்ட 15வது ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரசு கட்சியை சார்ந்த ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.ஏ. பொருளியல்
வசிப்பிடம்
: ஈரோடு
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1998
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 3
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 2
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 2
சொத்து நிலவரம்
: சொத்துகள்: ரூ 4,31,10,000
வேறு தொழில்
: விவசாயம்
தேர்தல் செய்திகள்