டாக்டர்.பி.வேணுகோபால்
டாக்டர்.பி.வேணுகோபால் 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ல் திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை முடித்தார். சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஏழைகளுக்காக பல இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். அதன் பின்பு அ.தி.மு.க கட்சியில் இணைந்த இவர் 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளின் நாடாளுமன்ற தேர்தல்களில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நீர்வள ஆதாரக் குழுவின் உறுப்பினராகவும், ஆலோசனைக் குழு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தில் உறுப்பினராகவும் பாராளுமன்ற மாளிகை வளாகத்தின் உணவு மேலாண்மை குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை இளங்கலை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை 1986 - சென்னை பல்கலைக்கழகம்
வசிப்பிடம்
: 4/55, திருவள்ளுவர் தெரு ஜி.கே.எம். காலனி, அகரம், சென்னை 600082
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 2
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 2
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 2
சொத்து நிலவரம்
: சொத்துகள் Rs 2,27,71,385
வேறு தொழில்
: மருத்துவர்
தேர்தல் செய்திகள்