புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார்.
1996 ஆம் ஆண்டு ஓட்டபிடாரம் தொகுதி எம்.எல் ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தார்.
பெற்றோர்: கருப்புசாமி தாமரை அம்மாள்
மனைவி பெயர்:சந்திரிகா
2 குழந்தைகள் உள்ளனர்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனக்கு ரூ.25.95 கோடி சொத்துகளும், ரூ.1.62 கோடி கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின்போது தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.17.75 கோடி என்றும், ரூ.1.59 கோடி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.