சிவில் இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு படித்த தேவே கவுடா, தனது 20வது வயதிலேயே தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்தார்.
1975-76ம் ஆண்டு, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த கால கட்டத்தில், சுதந்திரம் மற்றும் சம உரிமைக்காகப் போராடியதால் அதிகாரத்தின் கோபத்திற்கு ஆளானார் தேவே கவுடா. இதனால் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தற்காலிகச் சிறை வாழ்க்கையில் கிடைத்த ஓய்வில் நிறைய புத்தகங்களை படித்து தனது அரசியல் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டார்.