தயாநிதி மாறன்
தயாநிதி மாறன் முன்னாள் மத்திய அமைச்சரான முரசொலி மாறனின் மகன் ஆவார். இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித்தார். அந்த காலகட்டத்தில் இந்தியாவின் நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார். தயாநிதிமாறன், வேட்பு மனு தாக்கலின் போது தனக்கு ரூ.11 கோடியே 66 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், வெறும் ரூ.59 ஆயிரம் மட்டுமே அசையா சொத்து இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தாக்கல் செய்திருந்த மனுவில், தன்னிடம் ஒரேயொரு கார் உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அசையும் சொத்துக்கள் தயாநிதி மாறனிடம் ரூ. 6 லட்சத்து 13 ஆயிரத்து 454 மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளன. வங்கிகளில் வைப்புத் தொகை, சேமிப்பு தொகை, பங்குபத்திர முதலீடு, பங்கு முதலீடு, நிறுவன முதலீடு, எல்.ஐ.சி., அஞ்சலக காப்பீட்டுத் தொகை, அறக்கட்டளைகளில் முதலீடுகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வட்டி என்று அவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2 கோடியே 58 லட்சத்து 64 ஆயிரத்து 410 ஆகும். தயாநிதிமாறனின் மனைவி பிரியாவிடம் 1745 கிராம் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் இதர நகைகள் என்று ரூ.1 கோடியே 76 லட்சத்து 92 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தயாநிதிமாறனின் மகள் திவ்யா பெயரில் ரூ.3 கோடியே 53 லட்சத்து 26 ஆயிரத்து 991 மதிப்புள்ள சொத்துக்களும், மகன் கரண் பெயரில் ரூ. 3 கோடியே 5 லட்சத்து 44 ஆயிரத்து 794 மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன. அசையா சொத்துக்கள் தயாநிதிமாறனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 10 கோடியே 94 லட்சத்து 29 ஆயிரத்து 157 ஆகும். அவரிடம் அசையா சொத்துக்களே இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் ரூ.1 கோடியே 66 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 3 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு தன் பெயரிலும், 3 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு தனது மனைவி பெயரிலும், 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு தன் மகன் பெயரிலும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திருக்குவளையில் உள்ள 59 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள நிலமே தனது அசையா சொத்து என தெரிவித்துள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: இளநிலை பொருளியல்
வசிப்பிடம்
: சென்னை
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 3
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: 11.67 கோடி
வேறு தொழில்
: சமூக பணியாளர் மற்றும் வணிகம்
தேர்தல் செய்திகள்