சாருபாலா.ஆர்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். இவரது கணவர் புதுக்கோட்டை ராஜா ராஜகோபால தொண்டைமான் ஆவார். இவர்களுக்கு பிருத்விராஜ் என்ற மகன், நிரஞ்சனி என்ற மகள் உள்ளனர். சாருபாலா தொண்டைமானின் பிறந்த நாள் 7-10-1958 ஆகும். இவர் எம்.ஏ. பொருளாதாரம், எம்.பில். பொருளாதாரம் படித்துள்ளார். திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே உள்ள அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு அரசியலில் ஆர்வம் கொண்டு த.மா.கா. தலைவர் மூப்பனார் இருந்த போது அக்கட்சியில் சேர்ந்தார். மாநகராட்சி மேயராக... கடந்த 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி மேயராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2006&ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மாநகராட்சி மேயராக வெற்றி பெற்றார். கடந்த 2009-ம் ஆண்டு மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் 4,351 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் குமாரிடம் தோல்வியை தழுவினார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட போதும் அ.தி.மு.க. வேட்பாளர் குமாரிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அ.தி.மு.க.வில் சாருபாலா தொண்டைமான் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் டி.டி.வி. தினகரன் அணியில் அவர் சேர்ந்தார். தற்போது அ.ம.மு.க.வில் அமைப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாத்தா தலைமை செயலாளர் திருச்சி மாநகராட்சி மேயராக பணியாற்றிய காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். சாருபாலா தொண்டைமானின் பெற்றோர் மறைந்து விட்டனர். தந்தை சுப்பிரமணியம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் செயற் பொறியாளராக பணியாற்றியவர். தாய் சரோஜினி சுப்பிரமணியம் சமூக சேவகியாக இருந்தார். சாருபாலா தொண்டைமானின் தாத்தா மறைந்த பாஸ்கர தொண்டைமான், காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது தலைமை செயலாளராக பணியாற்றிவர். சாருபாலா தொண்டைமானின் அண்ணன் ராமசுந்தரம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அண்ணி அர்ச்சனா ராமசுந்தரமும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எம்.பில் (பொருளாதாரம்) பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 1986-1987, 1984-86 இல் திருச்சி, புனித கிராஸ் கல்லூரியில் இருந்து எம்.ஏ (பொருளாதாரம்)
வசிப்பிடம்
: புதுக்கோட்டை அரண்மனை (பழைய) இலக்கம் 4, (புதிய) எண் .22, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 46, லேசன்ஸ் சாலை பிரதான சாலை, திருச்சிராப்பள்ளி -620001
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2000
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 3
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்து மதிப்பு: ரூ. 92,38,76,327
வேறு தொழில்
: சமூக பணியாளர்
தேர்தல் செய்திகள்