இவர் திருவண்ணாமலை தாலுகா தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்.1988லிருந்து 2001 வரை இளைஞர் அணி உறுப்பினராக இருந்தார். 2001ல் இருந்து 2011 வரை ஊராட்சி செயலாளர் மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர், 2011 முதல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த வனரோஜாவை எதிர்த்து போட்டியிட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.