பெயர் :அன்புமணி ராமதாஸ்
வயது :50
பிறந்த ஊர் :புதுச்சேரி
பிறந்த மாநிலம் :புதுச்சேரி,யூனியன் பிரதேசம்
தற்போதைய பதவி :இளைஞர் அணி தலைவர்,பாட்டாளி மக்கள் கட்சி
அன்புமணி ராமதாஸ் அவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆனார். பின்பு கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.
2004-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
2014-இல் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவையை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.
இவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, இவருடைய முயற்சியால் போலியோவை இந்தியாவில் முற்றிலுமாக ஒழித்ததாக, உலக சுகாதாரத் நிறுவனத் தலைவர் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக
வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவரது குடும்ப சொத்து விவரங்களை தெரிவித்து இருந்தார். அதன் விவரம் வருமாறு:
அன்புமணி பெயரில் அசையும் சொத்து ரூ.33 லட்சத்து 64,543, அசையாத சொத்து ஏதும் இல்லை. அவரது மனைவி சவுமியா
அன்புமணி பெயரில் அசையும் சொத்து ரூ.9 கோடியே 47 லட்சத்து 22,445, அசையாத சொத்து ரூ.23 கோடியே 37 லட்சத்து 57,019,
மனைவி பெயரில் சொந்தமாக வாங்கிய அசையா சொத்து ரூ.4 கோடியே 65 லட்சத்து 16,325. அசையா சொத்து வாங்கிய பின்,
வளர்ச்சிக்காக செய்த செலவு தோராயமாக ரூ.80 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய சந்தை மதிப்பு ரூ.23 கோடியே 37 லட்சத்து 57,059. தனக்காக வாங்கிய சொத்து ரூ.14 கோடியே 49 லட்சத்து 80,269. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மொத்தம் ரூ.7 கோடியே 26 லட்சத்து 81,681 கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.