ஆனந்த்.வ.து.ந
வ.து.ந.ஆனந்த் அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகன். வ.து.நடராஜன் தமிழக தொழிலாளர் நலத்துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர். ஆனந்தின் தாயார் இந்திராணி ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்தவர். இப்படியாக அதிமுக குடும்பம் என்றே அறியப்பட்டவர் ஆனந்த். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அவர் அணியில் இணைந்தார். தற்போது அமமுக சார்பில் ராமநாதபுரம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். அவர் பி.இ. பட்டதாரி. முழுநேர அரசியல்வாதியாக செயல்படும் இவருக்கு விவசாயத் தொழிலும் உள்ளது.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: கல்வி பி.இ.
வசிப்பிடம்
: முகவரி 2/25, ஏ. மணக்குடி, காரங்காடு, நம்புதாளை வழி, திருவாடானை, ராமநாதபுரம்.
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2000
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: அசையும் சொத்துகள் ரூ.1.34 கோடி அசையா சொத்துகள் ரூ.3.19 கோடி
வேறு தொழில்
: தொழில் விவசாயம் மற்றும் இறால் பண்ணை
தேர்தல் செய்திகள்