இவர் திருப்பூர் முருங்கப்பாளையத்தை சேர்ந்தவர். இவருடைய வயது 57. இவர் 10&ம் வகுப்பு படித்தவர். விவசாயம், பனியன் தொழில் செய்து வருகிறார்.
1980&ம் ஆண்டு அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். கிளை செயலாளராக தொடங்கி திருப்பூர் நகர பனியன் சங்க செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். 2001&ம் ஆண்டு திருப்பூர் நகர செயலாளரானார்.
2011&ம் ஆண்டு முதல் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
2011&ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
இவருடைய மனைவி லட்சுமி. மகன் பிரனேஷ். இவர் கட்டிடவியல் நிபுணர். மகள் விந்தியா. இவர் டாக்டருக்கு படித்து வருகிறார்