அழகர்சாமி.ஆர்
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அழகர்சாமி, 15 வயது முதல், சீறும் சிங்கங்கள் விஜயகாந்த் நற்பணி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார். கடந்த, 1991- - 92ல், அரசு பஸ் கண்டக்டராக பணியில் இருந்த போது, அங்கும் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கினார். கடந்த, 2005ல், விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது, மேடையில் அவருக்கு, செங்கோல், கிரீடம் அணிவித்து வியப்பில் ஆழ்த்தினார். இதனால், அழகர்சாமியின் மனைவி சாமுண்டேஸ்வரியை, 2006 சட்டசபை தேர்தலில், திருமங்கலம் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் உத்தரவிட்டார். அழகரும் தொடர்ந்து லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், 'சீட்' கேட்டு வந்துள்ளார். அதன்படி, தற்போதைய லோக்சபா தேர்தலில் போட்டியிடவும், சீட் கேட்டிருந்தார். தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளதால், பிரேமலதாவும், மகன் விஜய் பிரபாகரனும், விருதுநகரில் நிற்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அழகர் பெயரை விஜயகாந்தே தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: 10-ம் வகுப்பு
வசிப்பிடம்
: 402/2/1 திருவள்ளூர் நகர் , 6வது தெரு,100 வது வார்டு,மதுரை பழங்காநத்தம்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: அசையும் சொத்து ரூ.41.12 லட்சம்; அசையா சொத்து: ரூ.49.65 லட்சம்
வேறு தொழில்
: கழிவு பஞ்சு வேலை
தேர்தல் செய்திகள்