அகிலேஷ் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மற்றும் முலாயம் சிங் யாதவின் மகனுமாவார்.
2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத் தேர்தல்களில் இவரது பரப்புரை தனித்தன்மையுடையதாக இருந்தது.
மிதிவண்டியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் தனது குழுவில் தகவல்தொடர்பு தொழில்முறை வல்லுனரையும் வானொலித் தொகுப்பாளரையும் கொண்டிருந்ததும் இவரது ஆளுமையும் சமாஜ்வாடி கட்சி சட்டப்பேரவையின் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடிக்கக் காரணமாக அமைந்தது.
தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கக் காரணமாக அமைந்ததால் அகிலேஷ் தனது 38ஆவது வயதில் உத்தரப் பிரதேசத்தின் மிக இளமையான முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.