அஜய் ராய்
அஜய் ராய் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர். இவர் வாரணாசியில் பிறந்தவர்.இவரது தந்தை பெயர் சுரேந்திர ராய் மற்றும் தாயார் பெயர் பார்வதி தேவி ஆகும். அஜய் ராய் தனது ஆரம்பகால அரசியலை பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தொடங்கினார். 1996,2002 மற்றும் 2007 ஆகிய சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2009 ஆம் ஆண்டு பாரதீய ஜனதாவில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு கோலஸ்லா சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பிந்திரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அஜய் ராய் 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் தோல்வியடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது அஜய் ராய் 2019 ஆம் ஆண்டு மீண்டும் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுளது.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: வாரணாசி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1996
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 2
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ---
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்