திருவாரூர் மாவட்டம் ஏனங்குடியைச் சேர்ந்த எஸ்.ஆசை மணி(64) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி, பி.எல் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை சவுந்தர்ராஜன், மனைவி கலாவதி, மகன்கள் தாஜேஸ்குமார், அருண்குமார், மகள் சியாமளா தேவி ஆவர்.
இவர் திருமருகல் ஒன்றிய செயலாளர், ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அம்மா பேரவை செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளை வகித்தவர்.
கடந்த 1991 முதல் 1996 வரை குத்தாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அப்போது முன்னாள் அமைச்சர் கோ சி மணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அவரது சொந்த ஊரில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.