வாக்காளர்கள் | : | | 0 |
ஆண் | : | | 0 |
பெண் | : | | 0 |
திருநங்கை | : | | 0 |
‘நவாப்புகளின் நகரம்’ என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும்.
இது கோமதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சூர்யவம்ஷி எனும் ராஜவம்சத்தினரின் ஆட்சியிலிருந்து இந்நகரத்தின் வரலாறு துவங்குகிறது.
நவாப் ஆசஃப் உத் தௌலா என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரம் ஆவாத் நவாப்புகளின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது.
இவர்களின் ஆட்சியில்தான் இந்நகரின் கலாச்சாரம் மற்றும் பிரசித்தமான உணவுத்தயாரிப்பு பாரம்பரியம் முதலியவை செழித்து வளர்ந்திருக்கின்றன.
இந்த தொகுதி, பா.ஜ.க,வைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், வாஜ்பாயின் செல்லத் தொகுதி. 1991 முதல், 2004 வரை, இந்த தொகுதி அவர் வசம் தான் இருந்தது.கடந்த, 2004ல், அவரின் உதவியாளர், லால்ஜி தாண்டன் இங்கு வெற்றி பெற்றார்.
2009 - 2014 வரை, எம்.பி.,யாக இருந்த அவருக்கு பின், 2014ல், மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் வசம் இந்த தொகுதி வந்தது.அந்த தேர்தலில், அவருக்கு, 54 சதவீத ஓட்டுகள், அதாவது, 5.61 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, ரீட்டா பகுகுணா ஜோஷியை அவர் வீழ்த்தினார். இப்போது, ரீட்டா, பா.ஜ.,வில் உள்ளார். உபி., மாநில அமைச்சராகி விட்டார்.
இந்த தேர்தலிலும், ராஜ்நாத் சிங் தான் இங்கு போட்டியிடுகிறார். பா.ஜ.கவின் தொகுதி என்பதால், அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது.எனினும், அவரை, மூன்று பிரபலங்கள் எதிர்க்கின்றன. பா.ஜ.கவில் இருந்த, பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவி, பூனம், சமாஜ்வாதி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில், பிரபல சாமியார், பிரமோத் கிருஷ்ணம் நிற்கிறார்.ஸ்ரீகல்கி பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், 2014 தேர்தலில், சம்பல் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தவர்.பா.ஜ.,வுக்கு கிறிஸ்துவர் ஓட்டு கிடைக்காது என்ற எண்ணத்தை தகர்ப்பதற்காக, பா.ஜ., வேட்பாளர் ராஜ்நாத் சிங், தொகுதியில் உள்ள அனைத்து, கிறிஸ்துவ சபைகளின் தலைவர்களையும் சந்தித்து, அவர்களிடம் ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
கட்சிகளின் வேட்பாளர்கள், ஒருபுறம் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வரும் நிலையில், அவர்களின் மகன்களும், ஓட்டு சேகரிக்கின்றனர். ராஜ்நாத்தின் மகன்களான, பங்கஜ் மற்றும் நீரஜ், தந்தைக்காக, ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.சாமியார் கிருஷ்ணம் மகன், சர்தாக்; பூனம் சின்ஹாவின் மகன், குஷ் ஆகியோர், தொகுதியை சுற்றி வந்து, தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன