வாக்காளர்கள் | : | | 1669843 |
ஆண் | : | | 890648 |
பெண் | : | | 779148 |
திருநங்கை | : | | 47 |
அமேதி மக்களவை தொகுதி கடந்த 1967ம் ஆண்டு உருவானது. இந்த தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது பல முறை தன்வசம் வைத்திருந்தது. 4வது பொது தேர்தலில் (1967ம் ஆண்டு) வித்யாதர் பாஜ்பாய் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து நடந்த பொது தேர்தலிலும் மீண்டும் அவர் வெற்றி பெற்றார்.
6வது பொது தேர்தலில் ஜனதா கட்சியின் ரவீந்திர பிரதாப் சிங் வெற்றி பெற்றார்.
இதன்பின் நடந்த 7வது பொது தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மீண்டும் இத்தொகுதியை கைப்பற்றியது. இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்சய் காந்தி வெற்றி பெற்றார். சஞ்சயின் மரணத்திற்கு பின் இந்திரா காந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 8வது மற்றும் 9வது பொது தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலையான பின் சதீஷ் சர்மா 10வது மற்றும் 11வது பொது தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.
12வது பொது தேர்தலில் பா.ஜ.க.வின் சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். 13வது பொது தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி மீண்டும் தொகுதியை கைப்பற்றியது. இதன்பின் 14வது, 15வது மற்றும் கடைசியாக நடந்த 16வது பொது தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்
4-வது தேர்தல் 1967–71 வித்யாதர் வாஜ்பாய் காங்கிரஸ்
5-வது தேர்தல் 1971–77 வித்யாதர் வாஜ்பாய் காங்கிரஸ்
6-வது தேர்தல் 1977–80 ரவீந்திர பிரதாப் சிங் ஜனதா
7-வது தேர்தல் 1980a சஞ்சய் காந்தி காங்கிரஸ்
7-வது தேர்தல் 1981–84 ராஜிவ் காந்தி காங்கிரஸ்
8-வது தேர்தல் 1984–89 ராஜிவ் காந்தி காங்கிரஸ்
9-வது தேர்தல் 1989–91 ராஜிவ் காந்தி காங்கிரஸ்
10-வது தேர்தல் 1991a ராஜிவ் காந்தி காங்கிரஸ்
1991–96 சதீஷ் சர்மா காங்கிரஸ்
11-வது தேர்தல் 1996–98 சதீஷ் சர்மா காங்கிரஸ்
12-வது தேர்தல் 1998–99 டாக்டர் சஞ்சய் சிங் காங்கிரஸ்
13-வது தேர்தல் 1999–2004 சோனியா காந்தி காங்கிரஸ்
14-வது தேர்தல் 2004–09 ராகுல்காந்தி காங்கிரஸ்
15-வது தேர்தல் 2009–14 ராகுல்காந்தி காங்கிரஸ்
16-வது தேர்தல் 2014– ராகுல்காந்தி காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ராகுல்காந்தி, தான் வழக்கமாக போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் அமேதி
தொகுதியில் நிற்கிறார். இத்துடன் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் ஏற்கனவே ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. அமேதி தொகுதியில் இன்று ஓட்டுப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதி ஆரம் பத்தில் இருந்தே காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகிறது-. பெரும்பாலும் இந்திராகாந்தி குடும்பத்தினரே இங்கு போட்டியிட்டு வந்துள்ளனர். ராகுல்காந்தி இதற்கு முன்பு 3 தடவை போட்டி- யிட்டுள்ளார். இப்போது 4-வது தடவையாக களத்தில் இருக்கிறார். கடந்த காலங் களில் எல்லாம் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் தொகுதிகளில் ஒன்றாக அமேதி இருந்து வந்தது. ஆனால் கடந்த தேர்தலில் ராகுல்காந்திக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தப் பட்டது. மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார்.
வெற்றி எளிதாக இருக்காது ஓட்டு எண்ணிக்கையின் போது கூட முதலில் ராகுல்காந்தி பின்தங்கி தான் இருந்தார். பின்னர் தான் முன்னேறி வந்து வெற்றியும் பெற்றார். முந்தைய தேர்தல்களில் எல்லாம் 3 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவரால் ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஓட்டுக்கள் வித்திசாயத்தில் தான் வெற்றி பெற முடிந்தது. எனவே இந்த தடவை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கருதப்படுகிறது.
ஏனென்றால் ஸ்மிருதி ராணி மறுபடியும் இந்த தொகுதியிலேயே போட்டியிடவேண்டும் என்று நோக்கத்தில் கடந்த 5
ஆண்டுகளாக தொகுதியில் வலம் வந்து பல்வேறு பணிகளை செய்தார். 42 தடவை தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து
பல்வேறு உதவிகளையும் அவர் செய்துள்ளார்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஏராளமான திட்டங்களையும் தொகுதிக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். விசேஷ கவனம் உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா அரசு பதவிக்கு வந்ததற்கு பிறகு அமேதி தொகுதியில் விசேஷ கவனம் செலுத்தி பல்வேறு பணிகளையும் செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் தேர்தல் கவனிப்புகளும் பாரதீய ஜனதா சார்பில் அங்கு அதிகமாக நடந்துள்ளன. எனவே இந்த தடவை ஸ்மிருதி ராணி கடந்த தேர்தலை விட முன்னேறி வருவார் என பாரதீய ஜனதா கட்சியினர் கருதுகின்றனர்.
ஒருவேளை இங்கு தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தான் ராகுல்காந்தி வயநாடுக்கு சென்றுவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. அமேதி தொகுதியை பொறு த் த வ ரை யி ல் முஸ்லிம்கள் கணிசமாக இருக்கிறார்கள். மேலும் தலித் மற்றும் சில குறிப்பிட்ட சமூகத்தினர் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த ஓட்டுக்கள் காங்கிரசுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று கருதுகின்றனர். இந்திராகாந்தி குடும் பத்தின் மீது தொகுதி மக்களுக்கு விசுவாசம் எப்போதுமே உண்டு. அதிலிருந்து மாற மாட்டார் கள் என்ற எண்ணமும் காங்கிரசாரிடம் உள்ளது.
இந்த தொகுதி நீண்ட காலமாக வி.ஐ.பி. தொகுதி யாக இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு தொகுதியில் வளர்ச்சியை பார்க்க முடியவில்லை. பல இடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத தொகுதியாக இருக்கிறது. அதிருப்தி இதனால் இந்த தொகுதியில் அதிக அளவில் மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் அடிப்படை இன்று ஓட்டுப்பதிவு ராகுலுக்கு அமேதி சவாலாக இருக்குமா?
கடும் போட்டியை கொடுக்கும் ஸ்மிருதி ராணி வசதிகளை செய்து கொடுத்துள்ளார். இது பாரதீய ஜனதாவுக்கு
சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மாநில அரசு மீது பல இடங்களில் அதிருப்தியும்
காணப்படுகிறது. இது பாரதீய ஜனதாவுக்கு எதிராக அமையும் என்று எதிர் பார்க்கின்றனர்.
பா.ஜ.க. வின் முக்கிய தலைவராக மாயன்கேஷ்வர் எம்.எல்.ஏ. இருக்கிறார். இவர் தாகூர் சமூக தலைவராகவும் உள்ளார். அவர் மந்திரி பதவியை எதிர்பார்த்தார். ஆனால் யோகிஆதித்யநாத் வழங்கவில்லை. ஆதரவு திரட்டினர் எனவே அவர் தேர்தல் பணியில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். இது அந்த கட்சிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த தடவை எப்படியாவது அமேதியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத் தில் பெரும்பாலான பா.ஜ.க. தலைவர்கள் அமேதியில்
முகாமிட்டு ஆதரவு திரட்டி உள்ளனர்.
அமேதி தொகுதி கைவிட்டு போனால் அது காங்கிரசுக்கு கவுரவ பிரச்சினையாக மாறிவிடும். எனவே தொகுதியை
எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும் அதிதீவிரம் காட்டினார்கள். பிரியங்காவும் இந்த தொகுதியில் அதிக கவனம் செலுத்தி பிரசாரம் மேற்கொண்டார்.
2 தொகுதியில் போட்டி யிடும் ராகுல்காந்தி அமேதின் யில் வெற்றி பெற்றாலும் ந்பதவியை ராஜினாமான்செய்துவிட்டு வயநாடுன் தொகுதியை தான் தக்க ந்ப்வைப்பார். எனவே அவருக்குன்ஓட்டு போட வேண்டாம் என பாரதீய ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்து
வருகிறார்கள். இது காங்கிர ந்சுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ராகுல்காந்தி தொகுதி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்று எழுதினார். அதில் அமேதி தொகுதி எனது குடும்பத்தின் அங்கம் என்று குறிப்பிட்டு பல்வேறு வே ண்டு கோள்களையும் விடுத்திருந்தார். எப்படியாவது அமேதியை தக்க வைக்க வேண்டும் என்பது காங்கிரசின் திட்டம். அதை கைப்பற்றியே தீர வேண்டும் என்பது பாரதீய ஜனதாவின் திட்டம். இதற் காக இருவருமே களத்தில் சமநிலையில் இருந்து போராடுகிறார்கள்.
இன்று ஓட்டு போட்ட மக்கள் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் .