வாக்காளர்கள் | : | | 1480600 |
ஆண் | : | | 724093 |
பெண் | : | | 756377 |
திருநங்கை | : | | 130 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. மாணிக்கம்தாகூர் - காங்கிரஸ் - 470883-வெற்றி
2. அழகர்சாமி - தேசிய முற்போக்கு திராவிட கழகம் - 316329
3. பரமசிவ அய்யப்பன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 107615
4. முனியசாமி - மக்கள் நீதி மய்யம் - 57129
5. அருள்மொழிதேவன் - நாம் தமிழர் கட்சி - 53040
6. சக்கரவர்த்தி - அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்-2731
7. பெருமாள்சாமி - பகுஜன் சமாஜ் கட்சி-3707
8. கவிதா - அகில இந்திய தியாக மக்கள் முன்னேற்ற கட்சி-1632
9. மணிகண்டன் - எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்-1964
10. பாக்கியராஜ் - தமிழக இளைஞர் கட்சி-1529
11. வள்ளிநாயகம் - சுயேச்சை-2289
12. கல்யாணசுந்தரம் - சுயேச்சை-2479
13. தனுஷ்கோடி - சுயேச்சை-3108
14. கணேஷ்குமார் - சுயேச்சை-1622
15. சுகன் ராஜு - சுயேச்சை -2435
16. இளங்கோ - சுயேச்சை-935
17. பாலசந்தர் - சுயேச்சை-1812
18. உமையொருபாகம் - சுயேச்சை-788
19. சங்கரநாராயணன் - சுயேச்சை-3701
20. சபரி பொன்ராஜ் - சுயேச்சை-5662
21. செல்வக்குமார் - சுயேச்சை-842
22. தங்கப்பாண்டியன் - சுயேச்சை-1495
23. கோவிந்தன் - சுயேச்சை-4194
24. என்.அழகர்சாமி - சுயேச்சை-3723
25. எம்.பாக்கியராஜ் - சுயேச்சை-822
26. செந்தில்குமார் - சுயேச்சை-2714
27. பழனிசாமி - சுயேச்சை-1060
28. தியாகராஜன் - சுயேச்சை-850
29.நோட்டா-17087
2008–ம் ஆண்டு தான் சிவகாசி நாடாளுமன்ற தொகுதி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியாக மாற்றம் பெற்றது. அதற்கு முன்பு இருந்த சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று இருந்தன.
சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் 1967–ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுதந்திரா கட்சியை சேர்ந்த ராமமூர்த்தியும், 1971, 1977 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயலட்சுமியும் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து 1991–ம் ஆண்டு வரை நடைபெற்ற நான்கு தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல் களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நல்லவன் என்கிற சவுந்தரராஜனும், 1989–ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் காளிமுத்துவும், 1991–ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் கனககோவிந்தராஜூலுவும் வெற்றி பெற்றனர். 1996–ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அழகிரிசாமி வெற்றி பெற்றார். 1998–2004 ஆண்டு வரை நடந்த 3 தேர்தல்களிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது.
1998, 1999 ஆகிய தேர்தல்களில் ம.தி.மு.க. வேட்பாளராக நின்ற அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும், 2004–ம் ஆண்டு ம.தி.மு.க. வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் வெற்றி பெற்றனர். 2004–ம் ஆண்டு சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் 4,69,072 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ப.கண்ணன் 3,04,555 ஓட்டுகள் பெற்றார். 1967–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 2 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், ம.தி.மு.க. 3 முறையும், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் சுதந்திராகட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றன. தொகுதி சீரமைப்புக்கு பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உருப்பெற்று இத்தொகுதியில் 2009–ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
2009–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றார். கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்
டி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 4,06,694 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.
தற்போது இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த கட்சியின் சார்பில் அழகர்சாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதே போல் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம்தாகூர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அ.ம.மு.க. சார்பில் பரமசிவ அய்யப்பனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் முனியசாமியும் களம் இறங்கியுள்ளனர். தொகுதியில் முக்குலத்தோர், நாயக்கர், நாடார், ஆதிதிராவிடர், மூப்பர், சிறுபான்மையினர், செட்டியார், ரெட்டியார், பிள்ளைமார், அருந்ததியர், சாலியர், விசுவகர்மா, சவுராஷ்டிரா உள்ளிட்ட சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர்.
முக்கிய பிரச்சினைகள்
கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டால் பாதிப்பு அடைந்துள்ள பட்டாசு தொழில் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றது. மேலும் விருதுநகர்–சாத்தூர் இடையே கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் கைவிடப்பட்டதும், தொழில் முதலீட்டு மையம் கொண்டு வரும் திட்டம் அமலுக்கு வராததும் மாவட்டத்தில் உள்ள படித்தஇளைஞர்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்டு ஆலை நலிவடைந்த நிலையில் அதற்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் ஓட்டு விவரம் வருமாறு:–
டி.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) 4,06,694
ரத்தினவேலு (தி.மு.க.) 2,41,505
வைகோ (ம.தி.மு.க.) 2,21,143
மாணிக்கம்தாகூர் (காங்கிரஸ்) 38,482
சாமுவேல்ராஜ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) 20,157
கடந்த ஜனவரி 31–ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 14,63,316 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை வருமாறு:–
சாத்தூர் 2,32,537
சிவகாசி 2,40,676
விருதுநகர் 2,08,733
அருப்புக்கோட்டை 2,11,338
திருமங்கலம் 2,64,475
திருப்பரங்குன்றம் 3,05,557
வெற்றி யார் கையில்?
விருதுநகர் தொகுதியில் இதுவரை 1,13,078 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு தேதிவரை புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பு தரப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே இத்தொகுதியில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 1½ லட்சம் வரை வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய வாக்காளர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குவார்கள் என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணி மாற்றங்கள், அம்மா மக்கள் முன்னேற்றகழகம் உதயம், தொகுதி பிரச்சினைகள் ஆகியவையும் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வை பொறுத்தமட்டில் கடந்த 2004–ம் ஆண்டு விருதுநகரில் நடந்த தி.மு.க தென்மண்டல மாநாட்டை தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அந்ததேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதே போன்று விருதுநகரில் இந்தமுறையும் தென்மண்டல தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இங்கு தொடங்கி உள்ளதால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 4 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 2 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்றன. அந்த தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:
விருதுநகர் (தி.மு.க. வெற்றி)
ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (தி.மு.க.) 65,499
கலாநிதி (அ.தி.மு.க.) 62,629
செய்யது காஜா ஷெரீப் (தே.மு.தி.க.) 10,127
சிவகாசி (அ.தி.மு.க. வெற்றி)
கே.டி.ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு.க.) 76,734
ஸ்ரீராஜா சொக்கர் (காங்கிரஸ்) 61,986
சுதாகர் (தே.மு.தி.க.) 17,379
சாத்தூர் (அ.தி.மு.க. வெற்றி)
சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) 71,513
சீனிவாசன் (தி.மு.க.) 67,086
ரகுராமன் (ம.தி.மு.க.) 25,442
அருப்புக்கோட்டை (தி.மு.க. வெற்றி)
சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.) 81,485
வைகை செல்வன் (அ.தி.மு.க.) 61,431
செந்தில்குமார் (இந்திய கம்யூனிஸ்டு) 9,817
திருமங்கலம் (அ.தி.மு.க. வெற்றி)
ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.) 95,864
ஜெயராம் (காங்கிரஸ்) 72,274
சீனிவாசன் (தே.மு.தி.க.) 20,589
திருப்பரங்குன்றம் (அ.தி.மு.க. வெற்றி)
சீனிவேல் (அ.தி.மு.க.) 93,453
மணிமாறன் (தி.மு.க.) 70,461