வாக்காளர்கள் | : | | 1425401 |
ஆண் | : | | 700373 |
பெண் | : | | 724912 |
திருநங்கை | : | | 116 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. கனிமொழி கருணாநிதி - திராவிட முன்னேற்ற கழகம்-563143-வெற்றி
2. தமிழிசை சவுந்தரராஜன் - பாரதிய ஜனதா கட்சி -215934
3. ம.புவனேசுவரன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-76866
4. த.பொ.சீ.பொன்குமரன் - மக்கள் நீதி மய்யம்-25702
5. சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் - நாம் தமிழர் கட்சி-49222
6. வே.சிவா - பகுஜன் சமாஜ் கட்சி -2927
7. கபிரியேல் ஜேம்ஸ் பெர்ணான்டோ - பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா(செ)-2549
8. ம.மகாராஜன் - பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி (லோகியா) -2922
9. ஈ.வி.எஸ்.ராஜகுமார் நாயுடு - தமிழ் தெலுங்கு தேசிய கட்சி -2516
10. ராஜ்குமார் போலையா - யுனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மண்ட் -689
11. து.ஜெயகணேஷ் - நாம் இந்தியர் -908
12. எஸ்.ஜெர்மனஸ் - கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி -494
13. மை.அண்டோ ஹிலரி - சுயேச்சை-924
14. அமலன் ராஜீவ்போனிபாஸ் - சுயேச்சை-2005
15. மு.கணேசன் - சுயேச்சை -1453
16. க.குரு - சுயேச்சை -2276
17. மு.சங்கரலிங்கம் - சுயேச்சை -3029
18. க.சரவணன் - சுயேச்சை-2135
19. வே.சன்மேன் - சுயேச்சை -615
20. ஜெ.சிவனேசுவரன் - சுயேச்சை -5252
21. இரா.ச.சுபாஷினி மள்ளத்தி - சுயேச்சை-8109
22. பா.செல்வின் - சுயேச்சை -929
23. ரா.சேனை நடராஜன் - சுயேச்சை -474
24. பூ.பாலமுருகன்- சுயேச்சை -1699
25. பிரதீப் கணேசன் - சுயேச்சை -887
26. ச.பொன்ராஜ் - சுயேச்சை -560
27. மு.பொன்னுசாமி - சுயேச்சை -436
28. மரகதராகவராஜ் - சுயேச்சை -428
29. அ.ரமேஷ் - சுயேச்சை -669
30. ஜெ.ரவிசங்கர் - சுயேச்சை -487
31. ம.ராமகிருஷ்ணன் - சுயேச்சை -473
32. பா.ராமகிருஷ்ணன் - சுயேச்சை -1671
33. மு.ராஜலிங்கம் - சுயேச்சை -1866
34. எஸ்.லூடஸ் - சுயேச்சை -460
35. ஆ.ஜெயராஜ் - சுயேச்சை -477
36. கா.ஜேம்ஸ் - சுயேச்சை -407
37. ஞா.ஜேஸ்பர் ஞானமார்ட்டின் - சுயேச்சை -436
38.நோட்டா-9234
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி 6 சட்டசபை தொகுதிகளை ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒரு தொகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் தூத்துக்குடி மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதியுடன் இணைந்து இருந்தது. இந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தொகுதி மறு சீரமைப்பின்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒரே எம்.பி. என்ற நிலை உருவாக்கப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009–ம் ஆண்டு நடந்த தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.ஜெயதுரை வெற்றி பெற்றார். கடந்த 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி வெற்றி பெற்றார்.
தொழில் நகரம்
தூத்துக்குடி தொகுதியில் பல்வேறு மதங்களை சேர்ந்த வாக்காளர்களும் நிரம்பி உள்ளனர். இங்கு இந்துக்கள் 69.73 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 24.77 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 5.50 சதவீதம் பேரும் உள்ளனர்.
நாடார் சமூகத்தினர் 30.03 சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 20.16 சதவீதம் பேரும், நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 10.16 சதவீதம் பேரும், மீனவர்கள் 5.83 சதவீதம் பேரும், தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 7.50 சதவீதம் பேரும் உள்ளனர்.
ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 7.33 சதவீதம் பேரும், பிள்ளைமார் வகுப்பினர் 5.66 சதவீதம் பேரும், பிராமணர் வகுப்பினர் 1.33 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 5.50 சதவீதம் பேரும், இதர வகுப்பினர் 4 சதவீதம் பேரும் உள்ளனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி சாலை, ரெயில், விமானம் மற்றும் கப்பல் ஆகிய 4 வழி போக்குவரத்தும் கொண்ட தொகுதியாக உள்ளது. இந்த போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுத்து உள்ளது. தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மேம்பாலம், ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது, தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு ரெயில் தண்டவாளத்தை ஒட்டி பைபாஸ் சாலை அமைப்பது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையிலேயே வளராமல் நின்று விட்டன.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்
தூத்துக்குடியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற தொடங்கி உள்ளது. விமான நிலையம் விரிவாக்கத்துக்கான இடம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
தூத்துக்குடி தொகுதிக்கு முத்தாக விளங்கி வருவது வ.உ.சி. துறைமுகம். இந்த துறைமுகத்தில் வெளித்துறைமுகம் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டமாக சேது சமுத்திரம் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டமும் கோர்ட்டில் நிற்கிறது. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும், திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த திட்ட பணிகள் இதுவரை அங்குலம் கூட நகராமல் நிற்கிறது.
தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக அருப்புக்கோட்டை, மதுரைக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி தனியார் பங்களிப்புடன் வேகமாக தொடங்கியது. ஆனால் தற்போது திட்டம் ஆமை வேகத்தில் நடந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்கள் தாங்கள் தேர்வு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் செய்ய வேண்டிய பணிகளாக சிலவற்றை கருதுகின்றனர். அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அந்த பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் ரெடிமேடு ஆடை பூங்கா அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
திருச்செந்தூர் தொகுதியில் மீனவர்களுக்காக மீன்பதப் படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது. திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரெயிலை விழுப்புரம் வழியாக இயக்க வேண்டும். கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். விளாத்திகுளம் தொகுதியில் மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு போதுமான குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தாமிரபரணி ஆற்றை பிரதானமாக கொண்டு விவசாயம் நடந்து வருகிறது. இங்கிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாழையை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தங்கள் எம்.பி. நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய மக்கள் தயாராகி வருகின்றனர்.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி 1,24,002 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:–
ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) 3,66,052
பி.ஜெகன் (தி.மு.க.).....................................2,42,050
எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.)...............................1,82,191
ஏ.பி.சி.வி.சண்முகம் (காங்கிரஸ்).....................63,080
எம்.புஷ்பராயன் (ஆம்ஆத்மி)............................26,476
வெற்றி யார் கையில்?
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் தென்பகுதியில் முன்பு திருச்செந்தூர் தொகுதியாக இருந்தது. அப்போது அங்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், தி.மு.க. 3 முறையும் வெற்றி வாகை சூடி உள்ளது. அ.தி.மு.க. ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. சுதந்திரா கட்சி, சுயேச்சை, தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்று இருந்தது. தற்போதும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வசமே உள்ளது. ஆனால் தொகுதி சீரமைப்புக்கு பிறகு அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் மாறி, மாறி தொகுதியை தக்கவைத்து உள்ளன. இரு கட்சிகளும் சமபலத்துடன் உள்ளன.
அதே நேரத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் இன்னும் உயிரோட்டமாக இருப்பதாக தெரிகிறது. இந்த வாக்குகள் யாருக்கு சாதகமாக அமையும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவர்களது வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. அதே போன்று புதிதாக இளம் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 608 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களின் வாக்கும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த தொகுதியில் தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்த இளம்வாக்காளர்கள் அளிக்கப்போகும் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும்.
இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி.யும், பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். அ.ம.மு.க. சார்பில் புவனேஷ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன் குமரன் ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள். தொகுதியில் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 2 ஆயிரத்து 300 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 90 ஆயிரத்து 106 பேரும், பெண்கள் 7 லட்சத்து 12 ஆயிரத்து 98 பேரும், திருநங்கைகள் 96 பேரும் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
விளாத்திகுளம் – 2,06,384
தூத்துக்குடி – 2,73,472
திருச்செந்தூர் – 2,31,359
ஸ்ரீவைகுண்டம் – 2,10,229
ஓட்டப்பிடாரம்(தனி)– 2,30,262
கோவில்பட்டி – 2,50,594
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:–
தூத்துக்குடி (தி.மு.க. வெற்றி)
பெ.கீதாஜீவன் (தி.மு.க.)............................88,045
சி.த.செல்லப்பாண்டியன் (அ.தி.மு.க.)...... 67,137
பாத்திமா பாபு (ம.தி.மு.க.).........................17,798
எம்.ஆர்.கனகராஜ் (பா.ஜனதா)....................6,250
விளாத்திகுளம் (அ.தி.மு.க. வெற்றி)
கே.உமாமகேசுவரி (அ.தி.மு.க.)........... 71,496
எஸ்.பீமராஜ் (தி.மு.க.)............................52,778
பி.கதிர்வேல் (த.மா.கா)..........................15,030
ராமமூர்த்தி (பா.ஜனதா)...........................6,441
திருச்செந்தூர் (தி.மு.க. வெற்றி)
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க.).........88,357
ஆர்.சரத்குமார் (ச.ம.க.)..................................62,356
ஏ.செந்தில்குமார் (தே.மு.தி.க.).........................6,330
வி.ஜெயராமன்(பா.ஜனதா)......................4,289
ஸ்ரீவைகுண்டம் (அ.தி.மு.க. வெற்றி)
எஸ்.பி.சண்முகநாதன்(அ.தி.மு.க.)........65,198
வி.ராணிவெங்கடேசன்(காங்கிரஸ்)........61,667
எஸ்.செல்வராஜ்(பா.ஜனதா)....................9,582
எஸ்.டி.ஆர்.விஜயசீலன்(த.மா.கா)...........6,203
ஓட்டப்பிடாரம்(தனி) (அ.தி.மு.க. வெற்றி)
ஆர்.சுந்தரராஜ் (அ.தி.மு.க.)..............................65,071
டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)......64,578
எஸ்.ஆறுமுகநயினார் (தே.மு.தி.க.).................14,127
ஏ.சந்தணகுமார் (பா.ஜனதா)..............................5,931
கோவில்பட்டி (அ.தி.மு.க. வெற்றி)
சி.கடம்பூர் ராஜூ(அ.தி.மு.க.).................64,514
ஏ.சுப்பிரமணியன்(தி.மு.க.).....................64,086
ஜி.விநாயகா ரமேஷ்(ம.தி.மு.க.).............28,512
நோட்டோ...........................2,350
டி.முத்துமாரி (நாம் தமிழர் கட்சி)..............2,070