வாக்காளர்கள் | : | | 1488944 |
ஆண் | : | | 732490 |
பெண் | : | | 756376 |
திருநங்கை | : | | 78 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:-
1. டாக்டர் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்- 355870
2. தனுஷ் எம்.குமார் - திராவிட முன்னேற்ற கழகம் -476156 -வெற்றி
3. சு.பொன்னுத்தாய் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-92116
4. முனீஸ்வரன் - மக்கள் நீதி மய்யம்- 24023
5. மதிவாணன் - நாம் தமிழர் கட்சி- 59445
6. ரவி - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 1165
7. சிவஜெயபிரகாஷ் - சுயேச்சை- 1939
8. சுந்தரம் - சுயேச்சை- 1486
9. சுப்பையா - சுயேச்சை-804
10. சூரியரகுபதி - சுயேச்சை-3000
11. தங்கராஜ் - சுயேச்சை-723
12. தாமரை செல்வன் - சுயேச்சை-1471
13. பழனிச்சாமி - சுயேச்சை-2946
14. கோ.பொன்னுத்தாய் - சுயேச்சை
15. செல்வகுமார் - சுயேச்சை-2222
16. தனுஷ்கோடி - சுயேச்சை-1241
17. ரா.பொன்னுச்சாமி - சுயேச்சை-3302
18. ம.பொன்னுத்தாய் - சுயேச்சை -2424
19. மா.பொன்னுத்தாய் - சுயேச்சை-4723
20. முத்துமுருகன் - சுயேச்சை-1728
21. வைரவன் - சுயேச்சை-996
22. பரதராஜ் - சுயேச்சை-4226
23. பெருமாள்சாமி - சுயேச்சை-4327
24 மூர்த்தி - சுயேச்சை-1980
25. தீபன் அருண் - சுயேச்சை-1964
26. நோட்டா- 13900
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில்.
1957 - சங்கரபாண்டியன் - காங்கிரசு
1962 - சாமி - காங்கிரஸ்
1967 - ஆர்எஸ் ஆறுமுகம் - காங்கிரசு
1971 - செல்லச்சாமி - காங்கிரஸ்
1977 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ்
1980 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ்
1984 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ்
1989 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ்
1991 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ்
1996 - எம். அருணாச்சலம் - தா.மா.க.
1998 - முருகேசன் - அதிமுக
2004 - அப்பாத்துரை - சிபிஐ
2009 - பி. லிங்கம் - சிபிஐ
2014 - வசந்தி முருகேசன் அ.தி.மு.க
தென்காசி (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியின் நட்சத்திர வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியை எதிர்த்து திமுக, அமமுகவில் விருதுநகர் மாவட்ட அரசியல் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி யை உடைக்கும் வகையில் திமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமார் முதன் முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். இதே போன்று, அமமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் ஒன்றியத் தலைவர் எஸ்.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அதிமுகவில் அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர் இவர் என்பதால் தென்காசி (தனி) தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் அதிமு கவை வளர்த்தவர் தனுஷ்கோடி. இவர், 1977-ல் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1996-2001 வரை ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். திமுக மாவட்டச் செயலாளராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோடு ஒரே காலகட்டத்தில் அரசியலில் வலம் வந்து, அவர் திமுகவில் இணைந்தபோது தனுஷ்கோடியும் திமுகவில் இணைந்தவர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் தனுஷ்கோடி. இதன் காரணமாகவே கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்சி மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தென்காசி தொகுதியில் போட்டியிட தனுஷ் எம்.குமாருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிரான வாக்குகளை திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பெறுவார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று, ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருக்கும் அழகாபுரியானின் மகள்தான் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்னுத்தாய். இவர், 2011-16-ல் ராஜபாளையம் ஒன்றியக்குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அழகாபுரியான் மேலப் பாட்டம் கரிசல் குளத்தில் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். தந்தை மகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர் மற்றும் அதிகாரம் செலுத்துவதில் குறுக்கீடு போன்ற பிரச்சினையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுகவில் பொன்னுத்தாய் இணைந்தார். தற்போது அமமுகவில் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிரணி இணைச் செய லாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளரைத் தேடி வந்த அமமுக இத்தொகுதியில் பொன்னுத்தாயை களம் இறக்கியுள்ளது.
தென்காசி தொகுதியில் திமுக, புதிய தமிழகம், அமமுக வேட்பாளர்களுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர்களின் செல்வாக்கு, பிரச்சார உத்திகள் ஆகியவைதான் இங்கு வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலை உள்ளது.